Breaking News

கொள்ளையர்களை பிடிக்க முயன்ற பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - பெரியபாண்டி!

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பிடிக்கச் சென்ற மதுரவாயல் சட்டம் ஒழுங்கு பொலிஸ் அதிகாரியான பெரியபாண்டி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயமடை ந்துள்ளார். சென்னை - புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பாசாலை, முத்துமா ரியம்மன் கோவில் தெருவில் நடத்த ப்பட்ட ‘மகாலட்சுமி தங்கமாளிகை’ எனும் நகைக்கடையில் கடந்த மாதம் 16ஆம் திகதி நகைகள் களவாடப்பட்டு ள்ளன.இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதி சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும், சிலர் ராஜஸ்தானில் தலை மறைவாகி இருப்பதாகவும் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட தாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் இன்று காலை கொள்ளையர்களை சுற்றி வளைத்த தனிப்படையினர் அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தி யுள்ளனர்.  

இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு பொலிஸ் அதிகாரியான பெரிய பாண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, தமிழக காவல் துறை யின் உயரதிகாரிகள் அடங்கிய குழு ராஜஸ்தான் செல்ல இருப்பதாக தகவ ல்கள் தெரிவிக்கின்றன. 

இறந்த பொலிஸ் அதிகாரிக்கு எமது இணையம் சார்ந்த ஆழ்ந்த அனுதாப ங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.