வருங்கால முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்த வடக்கு முதல்வர் !
வடமாகாண சபையின் நேற்றைய அமர்வில் வருங்கால முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தமையால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
வடமாகாண சபையின் 112ஆவது அம ர்வு நேற்று காலை நடைபெற்ற போது முதலமைச்சர் வரவு செலவு திட்ட த்தின் ஆரம்ப உரையை நிகழ்த்தி னார்.
உரை நிகழ்த்த ஆரம்பிக்கும் போது, முதலமைச்சர் அவர்களு க்கும், அவைத்தலைவர் அவர்களு க்கும், அமைச்சர்களுக்கும், உறுப்பின ர்களுக்குமென விழித்து வணக்கம் தெரிவித்தார்.
இவ்வேளை குறுக்கிட்ட அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உங்களுக்கு நீங்களே வணக்கம் சொல்லுகின்றீர்களா? என கிண்டலான தொனியில் சிரி ப்புடன் கேட்டார்.
அதற்கு, இது முதலாவது வடமாகாண சபையின் இறுதி வரவு, செலவு திட்டம். அதுதான் வருங்கால முதலமைச்சருக்கும் வணக்கம் தெரிவித்தேன் என சிரித்தவாறு பதில் வழங்கியுள்ளார்.