யுத்தத்தக் காயங்களை ஆற்றுப்படுத்த பல ஆண்டுகள் நீடிக்குமாம் – மங்கள சமரவீர
யுத்தம் நிறைவடைந்தாலும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்று வதற்கு பல ஆண்டுகள் தேவையென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பால்நிலை சமத்துவத்துவமின்மை யை அகற்றுதல், மனித உரி மைகளை பேணிப் பாதுகாத்தல், சமத்துவமான பொருளாதாரத்தை அபிவிருத்தி செய் தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்க ளை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் முன்னெக்குமென தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அரசாங்கத்தினால் மட்டும் இச் சவால்களை வெற்றி கொள்ள முடியாதெனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகள் மனித உரிமை விவகாரங்களுக்கு அளித்து வரும் முக்கியத்துவம் மற்றும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியதென பிரான்கோ ஜேர்மன் மனித உரிமை விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளார்.