Breaking News

மலேஷியப் பிரதமருக்கும் முதலமைச்சருக்குமிடையிலான சந்திப்பு இன்று !

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேஷியப் பிரதமருக்கும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கி ழமை சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

இச் சந்திப்பு கொழும்பில் மலேஷியப் பிரதமர் நஜீப் ரஸாக்கை சந்திக்க வேண்டுமெனக் கோரி முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் முன்  வைத்தற்கமைய மலேஷியப் பிரத மரை இன்றைய தினம் சந்திப்பதற்கு  சந்தர்ப்பம் வடமாகாண முதலமைச்ச ருக்கு கிடைத்துள்ளது. 

இச்சந்திப்பில் வடமாகாணத்தில் நடைபெறுகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மற்றும் அங்கு வாழ்கின்ற மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள்  குறி த்து ஆராயப்பட்டதாக மலேஷியப் பிரதமர் தனது ருவிட்டர் தளத்தில் பதிவே  ற்றியுள்ளார். 

மேலும் பல அரசியல் விவகாரங்கள் இவ்வேளை கலந்துரையாடப்பெற்றுள்ள தாகவும் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஒன்றிணைந்து முன்னெ டுப்பதற்கும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திரு க்கும் மலேஷியப் பிரதமரின் இறுதிநாள் இன்றாகும்.