Breaking News

விக்கினங்களை தீர்க்கும் விநாயகன் !

விக்கினங்களை வேரறுக்கும் விநாயகப் பெரு மான் அவதரித்த நாளாக இன்று போற்றப்படுவதுடன், அனைத்து ஆலயங்களிலும் விசேட ஆராதனைகள்இ டம்பெற்று வருகின்றன. 

கணங்களின் அதிபதியாகவும் விக்கி னங்களை தீர்ப்பவராகவும் முதல் கட வுளாகவும் விளங்கும் விநாயகரின் முதன்மை விரதமாக ஆவணி சது ர்த்தி விளங்குகின்றது. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று அனுஷ்டி க்கப்படுகின்ற விநாயகர் சதுர்த்தி யானது, தனிச்சிறப்பு வாய்ந்தது என இந்துக்கள் நம்புகின்றனர். 

மலையகத்திலும் பல ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டா டப்பட்டது. ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளில் உள்ள விநா யகர் ஆலயங்களில் சதுர்த்தி விழா வெகு விமர்சையாகக் கொண்டா டப்படுகின்றது. சில ஆலயங்களில் மஞ்சளால் செய்த விநாயகர் சிலைகள் பூசைக்கு வைக்கப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.