எம்மைத் தண்டிப்பதற்காகவே புதிய நீதி அமைச்சர் நியமனம் - மஹிந்த ராஜபக்ச ஆதங்கம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னை யும் தனது தரப்பையும் தண்டிக்கவே புதிய நீதியமைச்சர் தெரிவு செய்யப்ப ட்டதாகவும் அவர் எவ்வாறு செயற்ப டுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கப்போவதாக மஹிந்த தனது ஆதாங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். என்னைக் குற்றவாளி என கூறிக்கொண்டு உண்மையான குற்றவாளிகள் நல்லாட்சிக்குள் மறைந்துள்ளதாக குறிப்பிட்டு ள்ளார்.
முகத்துவாரம் ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹாவிஷ்ணு ஆலய தரிசனத்தின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ச தனது ஆதங்கை பகிர்ந்துள்ளார்.
அரசாங்கத்தில் இதுவரை காலமும் கடமையாற்றிய நீதியமைச்சர் மாற்ற ப்பட்டு இப்போது புதிய நீதி அமைச்சர் மாற்றப்பட்டு இப்போது புதிய நீதிய மைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் எவ்வாறு செயற்படுகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்கத் தயரா கியுள்ளேன் எனவும் தன்னையும் தனது தரப்பினரையும் தண்டிக்கவே இவர்கள் செயற்பட முனைந்து வருகின்றார்கள். சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தில் தலையிடவில்லை, நீதிமன்றத்தை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றங்களுக்காகத்தானே நீதி அமைச்சரை நீக்கினார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.