நல்லாட்சி அரசாங்கத்தை பலப்படுத்துவோம் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் !
நல்லாட்சி அரசாங்கதின் பயணத்தை தடுக்கவும், பாராளுமன்ற செயற்பாடு களை குழப்பவுமே பொது எதிரணி யினர் செயற்பட்டு வருகின்றனர். அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கை யில்லாப் பிரேரணையினை அதிக பெரும்பான்மையில் தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கத்தை பலப்படு த்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பொது எதிரணியினர் எந்த பிரேரணையினை கொண்டுவந்தாலும் வெற்றிகொள்ள முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். அமைச்சர் ராஜித சேனாரத்ன விற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை பொது எதிரணியினர் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாரளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இதனைக் குறிப்பிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கருத்து தெரிவிக்கையில்.
அரசாங்கம் முன்னெடுக்கும் ஜனநாயக நகர்வுகளை தடுக்கும் வகையிலும், எமது வேலைத்திட்டங்களை தடுக்கும் வகையில் பொது எதிரணியினர் செயற்பட்டு வருகின்றனர்.
நல்லாட்சி என்பது மோசமான ஆட்சி அல்ல. இந்த ஆட்சியில் மக்களுக்கான வேலைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அதன் நோக்கத்தில் நாம் செயற்பட்டு வருகின்றனர்.
நாம் மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நாட்டை மீட்டெ டுக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் போது அதை தடுக்கும் வகையில் இவ ர்கள் சிலர் செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும்.
கடந்த 11 ஆண்டுகளாக இந்த நாடு பின்னோக்கி சென்றுள்ளது. இந்த நாட்டின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளில் நாட்டின் நிறைந்தி ருந்த நிலையில் அவற்றில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்கவே நல்லாட்சி அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
நாட்டை சரியான திசையில் மாற்றும் பயணத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இதில் சரியான நபர்களை இணைத்துக்கொண்டு பயணித்து வருகின்றோம். இன்று எவரும் பயமின்றி கதைக்கின்றனர்.
இதை தாங்கிக்கொள்ள முடியாத நபர்கள் அரசாங்கத்தில் முக்கிய நபர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டுவந்து பாராளு மன்றத்தில் அனாவசிய செயற்பாடுகள்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தனர், இப்போது அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை யினை கொண்டுவந்து அரசாங்கதின் அடுத்தகட்ட பயணத்தை தடுக்க முயற்சித்து வருகின்றனர்.
இவர்கள் எவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி பலமாக செயற்பட்டு வருகின்றது. எமது உறுப்பினர்களை காப்பாற்ற நாம் எப்போதும் முன்வருவோம்.
ஆகவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையினை அதி பெரும்பான்மையில் தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கத்தை பலப்படுத்துவோம் எனக் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
பிரதேச சபை மற்றும் மாகாணசபை பிரதிநிதித்துவத்தில் பெண்களின் பங்களிப்பு விடையத்தில் அதற்கு எதிராக பொது எதிரணியினர் வாக்க ளித்துள்ளனர்.
இந்த செயற்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கின்றே. 52 வீதமான பெண்கள் இந்த நாட்டில் உள்ள நிலையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை முழுமை யாக நிராகரிக்கும் வகையில் இந்த 43 பாரளுமன்ற உறுப்பினர்களும் செயற்ப ட்டுள்ளனர்.
இந்த நாட்டில் கல்வி, சுகாதாரம் ஆகிய முக்கிய துறைகளில் பிரச்சினைகள் உள்ள நிலையில் நாம் அதனை சரிசெய்ய செயற்பட்டு வரும் நிலையில் அதனை தடுக்க இவர்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவருகின்றனர்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை கூட எத்தனையோ நல்ல விடயங்களை தடுக்க முன்னெடுக்கும் நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம்.
தேவையில்லா பிரச்சினைகளை கொண்டுவந்து நாட்டினையும் நல்லாட்சி யையும் குழப்ப செயற்பட்டு வருகின்றனர். ஆகவே வடக்கு கிழக்கு மலையக மற்றும் தெற்கு வாழ் அனைத்துபெண்களும் இந்த நபர்களை நிராகரிக்க செயற்பட வேண்டும்.
எந்த மாவட்டத்தில் இவர்கள் போட்டியிட்டாளும் அவர்களை எமது பெண்கள் நிராகரிக்க வேண்டும்.இந்த அரசாங்கம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி நல்லாட்சியை மீண்டும் நிலைநாட்டியுள்ளனர்.
இதனை எமது மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
உலக நாடுகளின் உள்ள பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஒப்பிடும் போது நாம் மிகவும் போசமான நிலையில் உள்ளோம். எமது பெண்களின் பிரதிநிதித்துவத்தை நிராகரிக்கும் வகையில் எமது அரசியல் வரலாறுகள் உள்ளது.
இப்போது நாம் அதைனை மாற்றியுள்ளோம். பெண்களின் உரிமைகளை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். இதுவே எமக்குக் கிடைத்த வெற்றியாகும். நல்லாட்சி அரசாங்கம் இந்த ஐந்து ஆண்டுகளில் தனது கடமையினை நிறைவேற்றும். மக்களின் பணிகளை செய்யும்.
அதற்கும் அப்பால் அடுத்த அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஆட்சி அமைப்பார். இதில் எமது பெண்களின் பங்களிப்பு முழுமையாக இருக்கும். அதற்கு எமது பெண்கள் உதவ வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரகுமான் கருத்து தெரிவிக்கையில்,
தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அரசாங்கதின் வேலைத்திட்ட ங்களை தடுக்க பொது எதிரணியினர் பல்வேறு சூழ்சிகளை முன்னெடுத்தனர்.
பாராளுமன்றத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தனர். பாராளு மன்றத்தை நடத்தவிடாது பல்வேறு குழப்பச் செயற்பாடுகளை முன்னெ டுத்தனர்.
சில எம்.பிக்களை தாக்கும் முயற்சிகளை கூட இவர்கள் முன்னெடுத்தனர். அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவது அவருக்கு எதிரான இறுதிக்கட்ட அல்லது உச்சக்கட்ட செயற்பா டாகும்.
எனினும் பொது எதிரணியினர் இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டுவந்துள்ளனர். ஆரம்பத்தில் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக இரண்டு தடவை கொண்டுவந்தனர். அரசாங்க த்திற்கு எதிராக செயற்பட்டனர்.
இப்போது அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருகின்றனர்.
நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவந்து வெற்றிகொள்ள முடியாது.
அதற்கான பலம் அவர்களிடம் இல்லை. ஆகவே முடியாத விடயங்களை முன்னெடுத்து அரசாங்கத்தின் காலத்தை கடத்தவே இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
பொது எதிரணியின் திட்டம் என்னவென்பது எமக்கு நன்றாகத் தெரியும். அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரும் சகல பிரேரணைகளையும் நாம் தோற்கடித்து அரசாங்கத்தை பலப்படுத்துவோம்.
இவர்கள் அனைவரும் என்ன செய்வதுதென்பது அறியாது செயற்பட்டு வருகின்றனர். விஜயதாச ராஜபக் ஷவின் அமைச்சு பதவி நீக்கப்பட்டமைக்கு பொது எதிரணி குரலெழுப்பி வருகின்றது.
அவரை நீக்கியது எமது கட்சியின் பிரச்சனை இதை நாமே கருத்தில் கொள்ளவேண்டும். பொது எதிரணி குரலெழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. எனினும் பொது எதிரணியில் உள்ள குற்றவாளிகள் இன்று மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இவர்களின் அனைத்து செயற்பாடுகளையும் தடுத்து அதி பெரும்பான்மையில் பிரேரணையை தோற்கடிப்போம்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாக கேள்விப்பட்டவுடன் இதனை மிகப்பெரிய நகைச்சுவையாக நாம் கருதினோம்.
எதிர்க்கட்சியில் உள்ள கள்ள அணியினர் தமது களவுகளை மறைக்க அரசாங்கதின் வேலைத்திட்டங்களை கொண்டுவருகின்றனர். ராஜித சேனா ரத்தன இந்த நாட்டில் சுகாதார சேவையில் மிகப்பெரிய சேவையினை முன்னெடுத்து வருகின்றார்.
இன்று நாட்டில் மருந்து வகைகளின் விலை குறைவடைந்துள்ளது. சாதாரண மக்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. எனினும் பொது எதிரணியில் உள்ளவர்களின் களவுகளை மறைக்க அரசாங்கத்தின் மீது குறைகூறி வருகின்றனர்.
நாம் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்போம்.
பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க கருத்து தெரிவிக்கையில்,
யானைகள் இப்போது தான் சரியாக செயற்பட ஆரம்பிக்கவுள்ளது.
இந்த இரண்டு ஆண்டுகளில் நல்லாட்சியில் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்து வந்தோம். இப்போது சரியான நேரத்தில் நாம் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் எதிர் தரப்பில் இருந்து செயற்படும் நபர்கள் நாட்டின் நல்லாட்சியை குழப்பும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இனி இவர்களின் விளையாட்டுக்களுக்கு இடம் இல்லை.
இந்த அரசாங்கத்தை காப்பாற்றி நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. நாம் அனைவரும் இன்று ஒரு அணியில் இருந்து கருத்து தெரிவிக்கின்றோம்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரும் இவர்கள் அனைவரும் கள்ளர்கள். கொலைகார்கள், கொள்ளைக்காரர்கள் , சூழல் கொள்ளையர்கள், வியாபாரக் கொள்ளையர்கள், கல்விக் கள்ளர்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் இணைந்து நல்லாட்சியை வீழ்த்த முயற்சித்து வருகின்றனர். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை அங்கத்தவர்கள் இன்று எடுத்துள்ள நடவடிக்கைகளை கண்டு இவர்கள் அஞ்சியுள்ளனர்.
எனவே இவர்கள் என்ன முயற்சிகளை எடுத்தாளும் அதற்கு நாம் தடையாக இருப்போம். அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் வைத்திய சேவையில் அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை.
தனிப்பட்ட காரணிகளை வைத்து அவரை பழிவாங்கவும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கள்ளர்களின் கதைகளை கேட்டு மக்கள் ஏமாறப் போவதில்லை. நாமும் ஏமாறப்போவதில்லை.
இந்த பிரேரணையினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் தோற்கடி ப்போம் .