மைத்திரியின் நல்லிணக்க அமைச்சு தொடர்பாக – தேசிய நல்லிணக்க அமைச்சு தெரிவிப்பு !
சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரி பால சிறிசேனவின்கீழ் உள்ள நல்லி ணக்க அமைச்சு மோசமான வினை த்திறனைக் கொண்டுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சு குறிப்பிட்டு ள்ளது. இவ்வமைச்சானது 2017ஆம் ஆண்டுக்கான நிதியில் 3.3 வீதமே செலவிட்டுள்ளதாக அவ்வமைச்சு குற்றம்சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக தேசிய நல்லிணக்க அமைச்சு அறி க்கையொன்றை விவரித்துள்ளது. அவ்வறிக்கையில், 2017ஆம் ஆண்டில், அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஜனவரி முதல் ஜூன் வரையான ஆறு மாத காலத்தில் அமைச்சுக்கள் செலவீடு செய்துள்ள நிதி பற்றிய தகவ ல்கள் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இதற்கமைய, சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள இரண்டு அமைச்சுக்கள் மாத்தி ரமே, ஒதுக்கப்பட்ட நிதியில் 50 வீதத்துக்கு மேல் செலவிட்டுள்ளன.
சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு, இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 70.4 வீதத்தை முதல் ஆறு மாதங்களில் செலவிட்டுள்ளது.
அடுத்ததாக, அஞ்சல் மற்றும் அஞ்சல் சேவைகள் அமைச்சு, ஒதுக்கப்பட்ட நிதியில், 50.5 வீதத்தை செலவழித்துள்ளது.
பல்வேறு அமைச்சுக்களுக்கும் இந்த ஆண்டில், 3, 628,110.4 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது, 1,792,165.1 மில்லியன் ரூபா மாத்திரம், முதல் அரையாண்டு காலத்தில் செலவிடப்பட்டு ள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பில் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்ப ட்ட நிதியில், 3.3 வீதத்தை மாத்திரமே செலவிட்டுள்ளது.
டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு, 3.9 வீதமான நிதியை செலவிட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சு 6.8 வீதமும், பொதுத்துறை நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சு 5.9 வீதமும், தமக்கான ஒதுக்கீடுகளை செலவிட்டுள்ளன என அர சாங்கம் குறிப்பிட்டுள்ளது.