பேரறிவாளன் பரோல் குறித்து நடிகர் சத்யராஜ் !
பேரறிவாளன் பரோலில் விடுவிக்க ப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். பேரறி வாளன் உள்பட 7 பேருக்கும் விடு தலை ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடை க்கப்பட்டிருந்த பேரறிவாளன் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் சிறையில் இருந்து சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார் பேரறிவாளன். அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் பேரறிவாளன் பரோல் விடுதலை குறித்து சமூக வலை தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பேரறிவாளன் பரோல்
'இன்றைய நாள் என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள். காரணம் பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். விடுதலை கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி.
அவருக்கு மட்டுமல்ல, ஏழு பேருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும்.
அவரை வரவேற்க அவரது வீட்டுப் பகுதியில் பெரும் திரளாக மக்கள் காத்திருந்தனர்.
26 வருடங்களுக்குப் பின்னர் வரும் பேரறிவாளனின் வருகை அப்பகுதியை உணர்ச்சிப்பூர்வமாக மாற்றியிருந்தது. பேரறிவாளனின் பெற்றோர் ஞான சேகரன் - அற்புதம் அம்மாள், சகோதரி அன்புமணி உள்ளிட்டோர் நெகிழ்ச்சி யுடன் காத்திருந்து தங்களது பிள்ளையை கண்ணீருடன் வரவேற்றனர்.