Breaking News

நல்லாட்சியை குழப்ப முனைவது முட்டாள்தனமானது: சுமந்திரன்



இரு பிரதான கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேசிய அரசாங்கத்தினை அமைத்துள்ள நிலையில், அதனை குழப்ப முனைவது முட்டாள்தனமான செயலென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரசின் கொள்கைத் திட்டத்தின் புதிய அரசியல் சாசனத்திற்கு தாம் ஆதரவளித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஒன்றுமே நடக்கவில்லை என கூற முடியாது எனவும் பல விடயங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதுடன் 3.2 வீதான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் காணாமல் போனவர்களின் சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்மக்களின் முக்கிய பிரச்சினைகள் அரசியல் ரீதியாக தீர்க்கப்படவேண்டும் எனவும் அதற்காக நாட்டின் சட்டவாக்கம், சமூக ஒப்பந்தங்கள் என்பன மாற்றி அமைக்கப்படவேண்டும் எனவும் அதற்காகதான் தாம் ஆதரவளித்ததாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.