பேஸ்புக்கில் மனோ கூட்டமைப்பிற்கு அழைப்பு
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவத தொடர்பான தனது யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எவ்வித பதிலையும் வழங்கவிவில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி "தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒன்றியம்" என்ற அமைப்பை அமைக்க வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இந்த யோசனையை தாம் கூட்டமைப்பு உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் ஸ்ரீதரன், சிவசக்தி ஆனந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரிடம் நான் ஒரு மாதத்தறிகு முன்பே முன்வைத்ததாகவும், எனினும் இதுவரை இது தொடர்பில் கூட்டமைப்பிடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பை உருவாக்குவதன் மூலம், தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் அரச, எதிரணி சிங்கள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வு தொடர்பில் ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ளதாகவும், எனினும் “தமது யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரா, என எவராவது கேட்டு சொல்லுங்கள்“ எனவும் அவர் பேஸ்புக் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் போனோர் விவகாரம் ஆகியவை உள்ளிட்ட தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் மத்தியில் ஒத்த கருத்து காணப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக, ஆளும் அணியில் இருப்பவர்கள் தனியாகவும், எதிரணியில் இருப்பவர்கள் தனியாகவும் அரச உயர்மட்டத்துடன் பேசுவது ஒரு முறைமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரச உயர்மட்டத்துடன், இந்த விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவது இன்னொரு முறைமை எனவும் அவர் கூறியுள்ளார்.
போராடும் அப்பாவி மக்கள், குறிப்பாக தாய்மார்கள் படும்பாட்டை பார்க்க மனம் கொந்தளிப்பதாகவும், ஒரு அமைச்சராக இருந்துக்கொண்டு இதைவிடவும் என்ன செய்ய முடியும் என தான் யோசிப்பதாகவும் அமைச்சர் மனோ கனேசன் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.