தமிழ்நாடு பிரிந்துபோக பொதுவாக்கெடுப்பு தேவை-கைதான கௌதமன் ஆவேசம்(காணொளி)
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி
இந்நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இயக்குநர் கவுதமன், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் சேர்ந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர்களை கலைக்க முயன்ற காவல்துறையினர் இயக்குநர் கவுதமன் உட்பட அனைவர் மீதும் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர்.
இயக்குநர் கவுதமனை விரட்டி விரட்டி காவல்துறையினர் தடியால் தாக்கினர். மேலும் அவரை தரதரவென சட்டையை பிடித்து இழுத்துச்சென்றனர்.
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்
அவனியாபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமனை காவல்துறையினர் விரட்டி விரட்டி தடியால் அடித்தனர். அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலீசார் கைது செய்தனர்.
பொங்கல் திருநாளன இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக இன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இயக்குநர் கவுதமன், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் சேர்ந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர்களை கலைக்க முயன்ற காவல்துறையினர் இயக்குநர் கவுதமன் உட்பட அனைவர் மீதும் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர்.
இயக்குநர் கவுதமனை விரட்டி விரட்டி காவல்துறையினர் தடியால் தாக்கினர். மேலும் அவரை தரதரவென சட்டையை பிடித்து இழுத்துச்சென்றனர்.
அவனியாபுரத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழ் ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.