உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையில் நடாத்த தீர்மானம்
உள்ளுராட்சி சபைத் தேர்தலை தொகுதிவாரி முறைப்படியே நடாத்த சகல கட்சித் தலைவர்களும் நேற்று (09) உடன்பட்டதாக உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை எதிர்வரும் 17 ஆம் திகதி, குழுவிலுள்ள 5 உறுப்பினர்களின் ஒப்பத்துடன் தன்னிடம் ஒப்படைக்க அக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் உடன்பட்டதாகவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார்.