Breaking News

நாங்கள் தான் பெரும்பான்மை நாம் சொல்வதை நீங்கள் கேளுங்கள்(காணொளி)


தற்போது தமிழர்கள் தரப்பில் தமிழரசு
பெரும்பான்மை என்றும் அதனை முதல்வர் விக்கினேஸ்வரன் உட்பட மற்றயவர்கள் புரிந்து அதனை அங்கீகரித்து அனுசரித்து நடந்தால் பலவற்றை சாதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
க்கட்சிதான்

ஆதவன் தொலைகாட்சிக்கு வழங்கிய சிறப்பு கலந்துரையாடலில் இதனை அவர் தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினர் அனந்தி மற்றும் மாகாண எதிர்கட்சி தலைவர் தவராசா பங்குகொண்ட நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

தமிழரசுக்கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மாகாண சபையில் இருப்பதாகவும் இன்னொருவர் ரெலோ கட்சியை சேர்ந்தவர் என்றும் மற்றவர் ஐங்கரநேசன் என்றும் அவரை ஒரு போதும் தமிழரசுக்கட்சியில் தான் சேர்க்கவிடமாட்டேன் என்றும் அவைத்தலைவரான சிவஞானம் தெரிவித்தார்.




மாகாணசபையானது வினைத்திறனுடன் செயலாற்றவில்லை எனவும் மாகாணசபைக்கான தலைமையான விக்கினேஸ்வரனின் ஆணவமான போக்கே மாகாணசபை திறமையாக செயற்படமுடியாமல் இருப்பதாகவும் அவர் குறைபட்டார்.

பெரும்பான்மை இனமான சிங்கள இனம் சிறுபான்மை இனமான தமிழினத்தை ஒடுக்குவதாகவும் சிறுபான்மை இனத்தின் உரிமைக்காகவும் போராடுவதாக குறிப்பிடும் தமிழரசு கட்சியின் மிகமூத்த உறுப்பினர்களில் ஒருவரான சிவஞானம் தங்கள் சொல்லை அனைத்துக் கட்சிகளும் கேட்கவேண்டும் என கூறுவது வேடிக்கையானது.

அத்தோடு மாகாணசபைக்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை முதல்வர் நியமித்ததாகவும் அதில் வேண்டாதவர்கள் சிலர் உள்வாங்கப்பட்டதால் அதில் தான் பங்குபற்றமாட்டேன் என சொல்லி வெளியேறி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகாணசபையை முன்னேற்றகரமாக செய்வதற்கு முதல்வர் தடையை ஏற்படுத்தி வருவதாகவும் மாகாணசபை உறுப்பினர்கள் பல்வேறு தகுதிகளை கொண்டிருந்தும் அதனை பயன்படுத்தவிடாமல் முதல்வர் ஆன்மிகம் பேசிக்கொண்டு ஆணவமாக நடப்பது தனக்கு கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தீவிர தேசியவாதம் பேசும் பலருடன் முதல்வர் விக்கினேஸ்வரனும் ஊடகங்களில் பிரபலமாவதற்காக சேர்ந்து பயணிப்பதாகவும் இதனாலேயே சிங்கள மக்களுடன் கூட நல்லுறவை பேணி பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளமுடியாமல் இருப்பதாகவும் அவர் கடிந்துகொண்டார்.

மற்றய மாகாணசபை அவைத்தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது தமிழர்களுக்கு தனியான அதிகாரம் எதுவும் கேட்கவில்லை என்றும் உங்கள் எல்லோருக்கும் சேர்த்தே நாங்கள் அதிகாரம் கேட்கின்றோம் என்பதை இராசதந்திரமாக தான் வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்