புலிகளின் தலைவர் இல்லாததால் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு முடிவு வந்துள்ளதாக சிலர் கதைக்கின்றனர்
புலிகளின் தலைவர் இன்று இல்லாத நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது எனவும், விடுதலைப்புலிகளின் தலைவர் இல்லாத நிலையில் சிலர் தமிழ் மக்களின் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகச் பேசி வருகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றததில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,
புலிகளின் தலைவர் இல்லாத நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாக சிலர் பேசி வருகின்றனர்.
எனவே, புலிகளின் பிரச்சனை வேறு, தமிழ் மக்களின் பிரச்சனை வேறு, இதனை நாம்தான் ஆரம்பத்திலிருந்து பேசி வருகின்றோம்.
இலங்கை – இந்திய உடன்படிக்கையின் பின்னர் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலருடன் நான் பழகியிருக்கின்றேன். அவர்களின் மன மாற்றங்களை அவதானித்து வந்துள்ளேன். யாழ். நூலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.
எனினும், யாழ்ப்பாண நூலகம் அழிவின் சின்னமாக இருக்கட்டும் எனத் தமிழ்த் தலைமைகள் விட்டுவிட்டனர்.
எமது முன்னைய தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அடுத்தடுத்த சந்ததியினருக்கு விட்டு சென்றதை போன்று நாமும் விட்டு செல்லக்கூடாது.
எமது காலத்திலேயே தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சினைகளின் தலைவிதி மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.