இலங்கையர்களின் இரத்தம் சுத்தமானது இல்லை; ரெயினோல்ட் குரே
இலங்கையிலுள்ள மக்கள் அனைவரது இரத்தமும் சுத்தமானது இல்லை என வடக்கு மாகாண ஆளுனர் ரெயினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
தமிழர்களது இரத்தமும் தமிழர்களது இரத்தமும் ஒன்றோடு ஒன்று கலந்ததுவே எனவும் வடமாகாண ஆளுநர் ரெயினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க செயற்பாட்டிற்கான மக்கள் விதந்துரைகள் தொடர்பாக வடக்கு கிழக்கு தேசோதய சபைகளின் விதந்துரைகள் எதிர்பார்ப்புக்கள் வெளியிடும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இச் சிறிய நாட்டிலே உள்ள மக்கள் இன மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும். இலங்கையில் உள்ள மக்களிடையே எங்கே பிரச்சனை என நான் சிந்தித்து பார்த்தபோது பிரச்சனை என்பது மக்களிடையே மனங்களிலும் மூளையிலுமே உள்ள குற்றமே காரணம்.
அத்தகைய குற்றத்தை மாற்றியமைக்க வேண்டும். நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியையும் செய்வதில் பிரச்சனையும் கஸ்ரமும் இல்லை.
ஆனால் மக்களின் மனங்களில் உள்ள குற்றங்களை நீக்கி ஒற்றுமைப்படுத்துவதே கடினமானதாகும்.
தற்போது இலங்கையில் மக்கள் தமிழர் சிங்களவர் என முரன்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் இலங்கையில் யாரினது இரத்தமும் சுத்தமானதில்லை. அனைவரது இரத்தமும் ஒன்றோடு ஒன்று கலந்ததுவே. நாட்டில் பல தலைவர்கள் இன மத பேதங்களை கடந்து சகோதர இன மக்களுடன் திருமணங்களையும் உறவுகளையும் பேணி வருகின்றனர்.
வடமாகாண முதலமைச்சரது வீட்டின் உள்ளே தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக உள்ளார்கள்.
ஆனால் அவரது வீட்டிற்கு வெளியே தான் தமிழர் சிங்களவர் என்ற பிரசசனை உள்ளது. தற்போது நாட்டில் சாந்தியும் அமைதியும் ஏற்பட்டுள்ளது. அதனை காப்பாற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.