இலங்கையின் பொறிமுறைகள் கொலம்பியாவிற்கு பொருத்தமில்லை!
இலங்கையின் சமாதானப் பொறிமுறைகள் கொலம்பியாவிற்கு பொருத்தமுடையதல்ல என தான் எண்ணுவதாக, அந்நாட்டு ஜனாதிபதி ஜூவான் மெனுவல் (Juan Manuel) தெரிவித்துள்ளார்.
அண்மையில் பார்க் கெரில்லா போராளிகளுடன் சமாதான உடன்படிக்கை ஒன்றில் கொலம்பிய ஜனாதிபதி கைச்சாத்திட்டிருந்தார்.
கடந்த 2002ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இடையில், நோர்வேயின் தலையீட்டில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இதன்படி இலங்கையின் சமாதானப் பொறிமுறைமை குறித்து விரிவாக ஆராயப்பட்ட போதிலும், அது கொலம்பியாவிற்கு பொருத்தமுடையதல்ல என தான் எண்ணுவதாக, ஜூவான் மெனுவல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான நோபள் சமாதான விருதும் கொலம்பிய ஜனாதிபதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த விருதினை பெற்றுக் கொள்வதற்காக நோர்வே சென்றுள்ள, கொலம்பிய ஜனாதிபதியிடம், நோர்வே ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் சமாதான முனைப்பு வழிகளை பின்பற்றவில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.