இலங்கையில் இனி முச்சக்கரவண்டி இல்லை:அதற்கு பதில் இது!(படங்கள்)
இனி முச்சக்கரவண்டி இல்லை!? முச்சக்கரவண்டிகளுக்கு ஊக்குவிப்பு அளிக்காமல், இலத்திரனியல் கார்களை அறிமுகப்படுத்துவற்கு 2 பில்லியன் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாரத்ண தெரிவித்தார்.
மேலும் இலத்திரனியல் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். புகையிரதம் மற்றும் பஸ்களில் அட்டைகளின் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான திட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இனி இலங்கையில் இது…! இலங்கை சந்தைகளில் புதிய ரக முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரபல தனியார் மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனம் ஒன்று இந்த முச்சக்கர வண்டியை இறக்குமதி செய்துள்ளது. கவர்ச்சி கரமான முறையில் வடிவமைக்கபட்டுள்ள குறித்த முச்சக்கரவண்டி சொகுசு பயணத்திற்கு ஏற்ற வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த முச்சரக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என இறக்குமதி உரிமையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.