ருகுனு பல்கலைக்கழகத்தில் டீசல் கண்டுபிடிப்பு
தேய்காய் உள்ளீட்டு சக்கை மற்றும் பாசி ஆகியவற்றை பயன்படுத்தி டீசல் உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ருகுனு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பொறியியல் பிரிவு ஆய்வு குழு ஒன்று இதனைக் கண்டறிந்துள்ளது. இவ்வாறு உருவாக்கப்படுகின்ற டீசலுக்கும், தற்போது பாவனையில் உள்ள டீசலுக்கும் இடையில் தரத்தில் பாரிய வித்தியாசம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த எட்டு வருடங்களாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வாகனங்களை செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.