அனைத்துச் செலவுகளையும் நாங்களே செய்கிறோம், எங்களை மன்னித்துகொள்ளுங்கள்!
என்னையும் மகளையும் காவல்துறையினர் ஏசி வாகனத்தில் ஏற்றி யாழ்ப்பாண காவல்துறை நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு எங்களுக்குத் தேநீர் தந்தனர். ஆனால், நாங்கள் மறுத்துவிட்டோம். பின்னர் அங்கே கம்பஸ் பெடியளும் வந்திட்டாங்கள்.
அங்குவைத்து காவல்துறையினர், இதனை நாங்கள் வேணுமெண்டு செய்யவில்லை. தவறுதலாகச் நடந்துவிட்டது. காவல்துறையினர்கள் வெறியில் இருந்தார்களோ தெரியவில்லை. அவர்கள் சுட்டதுதான் மாணவர்களுக்குப் பட்டது. மன்னித்துக் கொள்ளுங்கோ. இனிமேல் இப்படி எதுவும் நடைபெறாது எனத் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கொழும்பில் இருந்து ஆட்கள் வருகின்றாா்கள், அவா்களை நாங்கள் கைது செய்திருக்கின்றோம் கோட்சுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் தெரியாமல் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.
அத்துடன், காவல்துறை உங்களுக்கு பந்தல்போட்டு, கதிரை, பிஸ்கட், சோடா என அனைத்துச் செலவையும் செய்வார்கள் எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளிநொச்சி காவல்துறை நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பை எடுத்தனர். அவர்களுக்கு எங்கட வீட்டு முகவரியைச் சொல்லி போய் உதவி செய்யச் சொன்னார்கள்.
நாங்கள் செய்த குற்றத்திற்காக நாங்களே அனைத்துச் செலவையும் செய்கின்றோம். எல்லாச் செலவுகளையும் நாங்களே செய்யிறம் எனச் சொன்னார்கள். ஆனால், இங்க எங்கட சனங்கள் அவர்களை எதுவுமே செய்ய விடவில்லை. இங்கே காவல்துறையினர் எவருமே வரக்கூடாது எனவும், உங்களின் செலவுகள் எவையும் எங்களுக்குத் தேவையில்லையெனச் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
பிறகு கொழும்பிலிருந்து காவல்துறை பெரியாள் ஒருவா் கதைக்கிறன் என்று சொல்லி அவா் சொன்னாா் உங்கட பிள்ளைகள் ஏஏல், ஓஏல் படிச்சிருக்கினமா? நாங்கள் அவா்களுக்கு வேலைவாய்ப்பு தாறம். உங்களுக்கு நாங்கள் இந்த உதவியை மனிதாபிமான முறையில் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் தவறுதலாக நடந்துவிட்டது என்றாா்கள் என கொல்லப்பட்ட யாழ் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவனான நடராசா கஜன் அவா்களின் தாயாரான நடராசா சறோஜினி(வயது 61) தெரிவித்துள்ளாா்.
இந்த படுகொலைக்கு நியாயம் கற்பித்த முகநூல் மென்வலுக்கள் சிலரின் பதிவு
இந்த படுகொலைக்கு நியாயம் கற்பித்த முகநூல் மென்வலுக்கள் சிலரின் பதிவு
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்