Breaking News

தமிழர்கள் மீது சிங்களவர்கள் அட்டூழியம்..!!



தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கட்டவிழ்த்துவிட்டிருந்த கொடூர போர் உட்பட கொடுமையான அட்டூழியங்களை யோகர் சுவாமிகள் முன்கூட்டியே எதிர்கூறியிருந்ததாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த அழிவுகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் தமது கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை பாதுகாத்து அவற்றைப் பின்பற்றி வருவது தொடர்பில் தான் பெருமையடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போரினால் பேரழிவைச் சந்தித்த மாவட்டங்களில் ஒன்றான கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.