Breaking News

புதிய பயங்கரவாத தடைச் சட்ட மூலம் அடுத்த வாரம்



புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்ட மூலம் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.

இந்த சட்ட மூலம் பிரித்தானியாவில் காணப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு சமமானதாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, தற்பொழுது நாட்டிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும், அரசாங்கம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள தடைச் சட்ட மூலம் ஆபத்தானது என தமிழ் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் இன்றைய சிங்கள நாளிதழொன்று தெரிவித்துள்ளது.