அச்சுவேலி கொலை சம்பவம்: இராணுவத்தினருக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் 1996 ஆம் ஆண்டு பொதுமக்கள் இருவரை சுட்டுக்கொன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைதான இராணுவத்தினர் இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.