கேள்விக்குள்ளாகும் அரசியல் நேர்மை -சத்திரியன்
"போரில் பங்கேற்ற படையினர் மீது சட்ட
நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடாது என்பதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடாக உள்ளது. அதனால் தான், போரில் ஈடுபட்ட கடற்படைத் தளபதிகளை விசாரணைக்காக அழைக்கப்பட்டதை நான் விரும்பவில்லை என்று அவர் வெளிப்படையாக கூறி யிருக்கிறார். இதிலிருந்தே, படையினரை எந்த சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தக் கூடாது என்பதே அவரது மனோநிலையாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். "
பாதுகாப்பு அமைச்சில் கடந்தவாரம் நடந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை, அவரது அரசியல் நேர்மைக்குப் பலத்த சவாலையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் பாதுகாப்புச் செயலார் கோத்தாபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவர் உள்ளிபாதுகாப்பு அமைச்சில் கடந்தவாரம் நடந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை, அவரது அரசியல் நேர்மைக்குப் பலத்த சவாலையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் பாதுகாப்புச் செயலார் கோத்தாபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவர் உள்ளிட்ட 8 பேர் மீது, அவன்ட் கார்ட் விவகாரத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவு, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு என்பன, தன்னிச்சையாக அரசியல் நோக்கில் செயற்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
நாட்டுக்காக சேவையாற்றிய முன்னாள் கடற்படைத் தளபதிகள் மீது வழக்குத் தொடரப்பட்டிருப்பதாக விசனம் தெரிவித்திருந்த ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சராக இருந்தும் தனக்குத் தெரியாமல் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாக பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுபோன்று நடந்து கொண்டது, கருத்தை வெளியிட்டது இத தான் முதல் தடவை.
ஏற்கனவே, கடந்த ஆண்டில் அவர், முன்னாள் இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, அதனை பகிரங்கமாகவே கண்டித்திருந்தார்.
தமக்குத் தெரியாமல் படைத் தளபதிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக அவர் விசனத்தை வெளியிட்டிருந்தார்.
ஆனால் இப்போது அவர், முப்படைகளின் தளபதி என்ற வகையில் தனக்குத் தெரியப்படுத்தாமல், முன்னாள் படைத் தளபதிகள்,மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதற்காக மாத்திரம் ஜனாதிபதி விசனத்தை தெரிவிக்கவில்லை.
போரில் பங்கேற்ற படையினர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடாது என்பதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடாக உள்ளது.
அதனால் தான், போரில் ஈடுபட்ட கடற்படைத் தளபதிகளை விசாரணைக்காக அழைக்கப்பட்டதை நான் விரும்பவில்லை என்று அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதிலிருந்தே, படையினரை எந்த சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தக் கூடாது என்பதே அவரது மனோநிலையாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். படையினரைக் காட்டிக் கொடுக்கிறது அரசாங்கம், புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு ஏற்ப அவர்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்று தண்டிக்க முற்படுகிறது அரசாங்கம் என்று கூட்டு எதிரணியைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்ற நிலையில் தான், ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை இப்போது உறுதியாக வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.
படையினரை பலவீனப்படுத்தவும் மாட்டேன், பலவீனப்படுத்தவும் விடமாட்டேன், அவர்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பேன் என்று அண்மைய சில நாட்களாக அவர் கூறிவருவதைக் காண முடிகிறது.
கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஆதாரபூர்வமற்றதாக இருந்திருக்கும் எனக் கருத முடியாது. சட்டவலுவற்ற ஒரு வழக்கை தாக்கல் செய்வதற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருக்காது. அவ்வாறிருந்தும், ஜனாதிபதி இந்த விடயத்தில் காட்டுகின்ற அதிருப்தி அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள விரிசல் நிலையையும் எடுத்துக் காட்டியிருக்கிறது.
சட்டம் ஒழுங்கு அமைச்சை கையில் வைத்துள்ள ஐதேக, அரசியல் பழிவாங்கலை செய்யும் நோக்கில் செயற்படுவதாக ஜனாதிபதியின் குற்றச்சாட்டு அமைந்திருக்கிறது.
எவ்வாறாயினும், அவன்ட் கார்ட் வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டவர்கள் எவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களில்லை. அனைவரும், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் பதவியில் இருந்த அரச மற்றும் படை அதிகாரிகள் தான்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன படை அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் காட்டும் உறுதியை, சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை கவனத்தில் கொள்ளவில்லை.
பாதுகாப்பு அமைச்சில் அவர் நிகழ்த்திய உரையில், சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை ஜனாதிபதியே சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அவரே, போரில் பங்கெடுத்த படையினரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைப்பதை தான் விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
அவ்வாறாயின், சட்டம் எல்லோருக்கும் எவ்வாறு சமமானதாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன வழக்கில், கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தவறு செய்திருந்தால், பிணையில் விடுவித்து விட்டு சட்ட நடவடிக்கையை எடுக்குமாறும், இல்லாவிடின் அவர்களை விடுவிக்குமாறும் தான் கேட்டுக் கொண்டதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
ஆனால், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் இத்தகைய கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று ஜனாதிபதி கருதுவது உண்மையானால், தமிழ் அரசியல் கைதிகளையும், இராணுவப் புலனாய்வு அதிகாரிகளையும் அவர் வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்த்திருக்க மாட்டார்.
மகிந்த ராஜபக் ஷவும் கூட்டு எதிரணியும் கொடுக்கின்ற அழுத்தங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கடுமையாகவே பாதிக்கத் தொடங்கியுள்ளது.
அதனால் தான், கூட்டு எதிரணியின் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்து ஓட அவர் எத்தனிக்கிறார்.
படையினருக்கு எதிராக தான் எதையும் செய்யாமலேயே- படையினர் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்காக தன் மீது குற்றச்சாட்டுகள் விழுகின்றன என்ற ஆதங்கத்தை அவர் வெளியிட்டிருப்பதற்கு இதுவே காரணம்.
அதற்காகவே அவர் தான் ஒருபோதும் படையினரை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார்.
படையினரை பகைத்துக் கொண்டு ஆட்சியை நடத்த முடியாது என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றாகவே தெரியும்.
இராணுவத்துக்குள், மகிந்த - கோத்தபாய சார்பு அணி ஒன்று இருப்பது போலவே, சரத் பொன்சேகா சார்பு அணி, ஐதேக சார்பு அணி என்பனவும் இருக்கின்றன.
ஆனாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பு அணி என்று எதுவும் கிடையாது.
எனவே, படையினர் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகள் மேலிட்டால், தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அல்லது அதனைச் சமாளித்துக் கொள்வதற்கு இராணுவத்துக்குள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
எனவே தான், படைத்தரப்பைப் பகைத்துக் கொள்ளாத வகையில் செயற்பட முனைகிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இந்தக் கட்டத்தில் தான், பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தினாலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி இடமளிப்பாரா என்ற சந்தேகமும் கேள்வியும் எழுகிறது.
போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் விடயத்தில், குற்றமிழைத்தவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி ஒருபோதும் கொடுக்கவில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட, பொறுப்புக்கூறும் பொறிமுறை தண்டிப்பதை நோக்கமானதாக கொண்டிராது என்றும், உண்மையை வெளிக்கொண்டு வருவதையே நோக்கமாக கொண்டிருக்கும் என்று தான் கூறியிருந்தார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மட்டும் தான், குற்றமிழைத்தவர்கள் பொறுப்புக்கூறச் செய்யப்படுவார்கள் என்பதை கூறி வந்திருக்கிறார்.
பொறுப்புக்கூறல் பொறிமுறை பற்றிய நம்பிக்கைகள் தேய்ந்து போகத் தொடங்கியுள்ள இப்போதைய நிலையில், படையினரை விட்டுக் கொடுக்க மாட்டேன், அவர்களைப் பாதுகாப்பேன் என்ற ஜனாதிபதியின் உத்தரவாதமும், உறுதிமொழியும், பொறுப்புக்கூறலை எதிர்பார்த்திருக்கும் தரப்பினரை நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது.
குறிப்பாக, ஜனாதிபதியின் இந்த நிலைப்பாடு தமிழ் மக்களை பெருத்த ஏமாற்றங்களுக்கு உள்ளாக்கும்.
படையினரைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்ற வாக்குறுதியின் ஊடாக, குற்றமிழைத்தவர்களைப் பாதுகாக்க முனைந்தால் அது ஆபத்தானது. குற்றமிழைக்காத படையினரை சட்டத்தின் முன் நிறுத்த யாரும் இப்போது முனைந்ததாகத் தெரியவில்லை.
அவ்வாறான நிலையில், குற்றமிழைத்த படையினரை, அவர்கள் போரில் பங்கெடுத்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பாதுகாக்க முற்பட்டால், அது தவறான முன்னுதாரணமாகி விடும்.
அது ஜனாதிபதிக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும். அத்தகையதொரு கட்டத்தை நோக்கியதாகவே ஜனாதிபதியினது இப்போதைய நகர்வுகள் அமைந்திருக்கின்றன.ட்ட 8 பேர் மீது, அவன்ட் கார்ட் விவகாரத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

அது ஜனாதிபதிக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும். அத்தகையதொரு கட்டத்தை நோக்கியதாகவே ஜனாதிபதியினது இப்போதைய நகர்வுகள் அமைந்திருக்கின்றன.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்