கொக்குவெளியில் சிங்கள மக்களை வெளியேறுமாறு இளைஞர்குழு அச்சுறுத்தல்
வவுனியா கொக்குவெளி கிராமத்தில் வசிக்கும் சிங்கள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தமிழ் இளைஞர் குழுவொன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
கொக்குவெளி பிரதேசத்தை சேர்ந்த சின்னவன் என அழைக்கப்படும் நபரும் அவருடைய சகாக்களும் இணைந்தே தம்மை வெளியேற கோரியதாக அப்பகுதி சிங்கள மக்கள் தெரிவித்தனர்.
இதனால் சுமார் 30 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறி நேற்று இரவு 7 மணியளவில் ஏ9 வீதியை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டதை அடுத்து வவுனியா பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதுடன் அச்சுறுத்தல் விடுத்தவர்களை கைது செய்வதாக கொடுத்த வாக்குறுதியை ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
எனினும் பொலிஸார் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் குறித்த கிராமத்திற்கு அருகாமையில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்;றமையும் குறிப்பிடத்தக்கது.