காணாமற்போனோர் பணியக சட்டமூலத்தை நிறைவேற்றிய இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு
காணாமல் போனோர் தொடர்பான நிரந்த அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் நாடாம ன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
யுத்தம் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கு அமைப்பதாக புதிய அரசாங்கத்தால் உறுதி அளிக்கப்பட்ட நான்கு பொறிமுறைகளில் முதன்மையான காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை எட்டுவதற்கு இந்த அலுவலகம் ஒரு வழிமுறையாக அமையும் என ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நகர்வு, தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வரலாற்று ரீதியான மைல் கல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்காவில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பாரிய படியாக, காணாமல் போனோர் தொடர்பான நிரந்த அலுவலகத்தை அமைக்கும் சட்டம் அமைந்துள்ளதாக தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.