Breaking News

ரணிலுக்கு வாக்களித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது - விஜயகலா



இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிக்காமையினால் ஒருலட்சத்திற்கும் மேற்பட்டோரை முள்ளிவாய்க்காலில் பறிகொடுத்தாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

சிறுபான்மை மக்களின் வாக்குகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டமையே இறுதிக்கட்ட யுத்த்தின் போது ஏற்பட்ட இழப்புக்களுக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் வேலைணை உள்ளிட்ட தீவு பகுதிகளை ஆயுதக்குழுக்கள் தமது ஆதிக்கத்தில் வைத்திருந்ததோடு அரசியல்வாதிகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

இதனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளை அவர்கள் குழப்பியமையினாலேயே யுத்தம் ஏற்பட்டு பாரிய அழிவை தமிழ் மக்கள் சந்தித்தாக அவர் சுட்டிக்காட்டினார்.