அணிசேரா உச்சி மாநாடு, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்கு செல்கிறார் ஜனாதிபதி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டிலும், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 17 ஆவது உச்சி மாநாடு செப்ரெம்பர் 17, 18ஆம் நாள்களில் வெனிசுவேலா நாட்டின் கராகஸ் நகரில் நடைபெறவுள்ளது.
இதில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு, ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது அமர்வில் வரும் 21ஆம் நாள் உரையாற்றுவதற்காக சிறிலங்கா அதிபர் நியூயோர்க் செல்லவுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து வரும் ஜனவரி மாதம் விலகவுள்ள பராக் ஒபாமா, ஐ.நா பொதுச்சபையில் நிகழ்த்தவுள்ள கடைசி உரை இது என்பதாலும், 10 ஆண்டுகளாக ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்த பான் கீ மூன், இந்த ஆண்டு இறுதியுடன் ஓய்வுபெறவுள்ளதாலும், 71 ஆவது ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.