Breaking News

விச ஊசி விவகாரம் அடக்கி வாசியுங்கள்-டெனீஸ்வரன்(காணொளி)

அண்மைக்காலமாக முன்னாள் போராளிகளுக்கு
விச ஊசி ஏற்றப்பட்டது தொடர்பில் பலரும் ஆர்வம்கொண்டு திரிகின்றனர். ஆனால் அது பிழையான செயற்பாடு அவர்களுக்கு விசஊசி ஏற்றப்பட்டது என்பது மருத்துவப்பரிசோதனை செய்யப்படுகின்றபோது நிருபிக்க முடியாமல்போனால் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கூறுவது தவறான கருத்து என சர்வதேசத்தை சென்றடையும் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆலோசனை ஆக்கிரோசமாக கருத்து  தெரிவித்திருக்கின்றார்.

இன்றைய வடமாகாணசபை அமர்வில் இதுபற்றி பேசிய சிவாஜிலிங்கம் அண்மையில் வருகைதந்திருக்கும் அமெரிக்க மருத்துவர் குழு மூலம் விச ஊசி ஏற்றப்பட்டதாக சந்தேகம் வெளியிட்டிருக்கும், பல நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளிடம் மருத்துவப் பரிசோதனை செய்வதற்குரிய ஒழுங்குகளை முதலமைச்சர் செய்ய வேண்டும் என சபையில் கேட்டுக்கொண்டார்.


இதற்கு பதிலளித்த முதலமைச்சர் தான் கொழும்பிலிருந்து விமானத்தில் தன்னுடன் வருகை தந்திருந்த  அமெரிக்காவின் ஸ்ரீலங்காவிற்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப்பிடம் இந்த விடயத்தை கேட்டதாகவும் அதற்கு அவர் இணக்கம் தெரிவித்ததாகவும் கூறியதோடு அவ்வாறு விசஊசி பாதிப்புக்கு உள்ளாகியதாக இனங்காணப்படும் போராளிகள் சிலரை தெரிவு செய்தால் பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என கூறினார். 

முன்னாள் போராளிகள் சிலர் தாம் தடுப்புமுகாமில் இருந்தவேளை தடுப்புஊசி என்ற போர்வையில் மெல்லக்கொல்லும் விசஊசியும் சிலஇடங்களில் விச மாத்திரைகளும் தரப்பட்டதாகவும் அதனாலேயே தாம் தொடர்ந்தும் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் பலர் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு இலக்காகி மரணமடைந்துவருவதாகவும் அச்சம் வெளியிட்டிருந்ததோடு தமக்கு ஏற்றப்பட்டது விசஊசியா என்பதையும் தாம் பரிசோதிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் விச ஊசி விவகாரம் பொய்யானது என அண்மையில் தமிழரசுகட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் இன்று மொகாணசபை அமைச்சர் டெனீஸ்வரன் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விச ஊசி ஏற்றப்பட்டிருக்கலாம் முன்னாள் போராளி பேட்டி


தொடர்புடைய முன்னைய செய்தி

முன்னாள் போராளிகளை அமெரிக்க மருத்துவர்குழு பரிசோதிக்கும் -முதலமைச்சர்


முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்