கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டார் சி.வி.விக்னேஸ்வரன்
யோசனைகளை சமர்ப்பிப்பதற்காக, கிளிநொச்சியில் நடத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்றுள்ளார்.
தேசிய அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதில் உள்ளடக்கப்படவேண்டிய தமிழர் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆராயும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டம் ஆரம்பமானது போது கலந்து கொண்டிருக்கவில்லை.
இந்நிலையல், பிற்பகல் 3.30 மணியளவிலேயே அவர் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். என்று தமிழ்கிங்டத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.