செந்தூரனின் சகோதரிக்கு உதவி
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை புரிந்த மாணவன் செந்தூரனின் சகோதரிக்கு மடிக்கணணியும், பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்காக ஆரம்பகட்ட நிதியுதவியும் இன்று வியாழக்கிழமை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்களால் வழங்கப்பட்டது.
குறித்த மாணவி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்களின் முயற்சியின் விளைவாக, பிரான்ஸ் நாட்டிலுள்ள புலம்பெயர் உறவுகளின் ரீ.ஆர்.ரீ வானோலி நேயர்கள் வழங்கிய அன்பளிப்பிலேயே குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த மாணவிக்கான மடிக்கணணியும் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கான ஆரம்பகட்ட நிதி உதவியாக 31.000 ரூபா பணமும் இன்று அவரது இல்லத்தில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்களால் கையளிக்கப் பட்டது.
இதே வேளை மாணவியின் எதிர்கால பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கு தேவையான நிதி உதவியை வழங்குவதற்கு புலம்பெயர் சமூகம் முன்வந்திருப்தாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது குறிப்பிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.