காணி சட்டம் தொடர்பில் ஜே.வி.பி தகவல்
அரசாங்கம் எதிர்காலத்தில் காணிச் சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தோட்டக் காணிகளின் உரிமையை தனியாருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
தனியாருக்கான காணி உச்ச வரம்பு எல்லை 100 ஏக்கரிலிருந்து 250 ஏக்கராக உயர்த்தப்பட உள்ளது. 2001ம் ஆண்டில் அரசாங்கத்தினால் செய்ய முடியாத விடயங்களை இந்த தடவை செய்து கொள்ள முயற்சிப்பதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.