சுமந்திரனின் இன்றைய கூட்டம் ரத்து?-ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியே(காணொளி)
தமிழ்க்காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சியின் அவுஸ்திரேலியக் கிளை இணைந்து நடாத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த சுமந்திரனுடனான மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் சிட்னியில் சுமந்திரனுக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அவுஸ்திரேலியக் காவல்துறையின் துணையுடன் அடக்கிய அவுஸ்திரேலியத் தமிழ்க் காங்கிரஸினர், மெல்பேர்ண் தேசப்பற்றாளர்களின் எதிர்ப்பையும் மீறி மெல்பேர்ணிலும் ஏற்கனவே திட்டமிட்டபடி சுமந்திரன் கலந்துகொள்ளும் கூட்டத்தை நடாத்துவோம் என சூளுரைத்திருந்தனர்.
இந்நிலையில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சுமந்திரனுக்கெதிரான பதாகைகளுடன் சென்ற 60க்கும் மேற்பட்ட தேசப்பற்றாளர்கள் மண்டபம் பூட்டப்பட்டுள்ள நிலையில் மண்டபத்துக்கு வெளியே நிற்பதாக அங்கிருக்கும் தமிழ் கிங்டொம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மண்டபம் பூட்டப்பட்டுள்ள நிலையில் மண்டபத்துக்கு உள்ளே ஐந்தாறு பேர் இருப்பதாக தாம் நம்புவதாகவும் சுமந்திரன் எங்கே என்பது குறித்து தமக்கு எந்த தகவலும் தெரியாதிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.
சுமந்திரனுக்கெதிராக மெல்பேர்ணில் கூடிய தேசப்பற்றாளர்கள் வைத்திருந்த பதாகைகளில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியங்கள்
Sumanthiran: Don’t buy time and space for Genocidal Sri Lanka
Sumanthiran: Don’t be a slave to Sinhala Buddhist Ideology
Sumanthiran: Don’t help Srisena get away with Genocide
Go back and be a voice for political prisoners
அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய முயற்ச்சி எடு
கருணா டக்ள்ஸ் போன்றவர்களைப் பின்பற்றாதே
அடியாதே அடியாதே ஈழத் தமிழர்களின் வயிற்றில் அடியாதே
தமிழரின் வாக்கால் வென்றவரே காட்டுங்கள் உங்கள் விசுவாசத்தை தமிழருக்கு
இனச்சுத்திகரிப்பு’ கூற்றுக்காக தமிழர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்
உங்களை எதிர்த்தால் நாங்கள் நாய்களா?
முதல்வரை வெளியேற்ற சதிவலை பின்னாதே போன்ற வாசகங்களை தாங்கியிருந்தனர்