ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் அழைப்பு
பாரியளவிலான மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி சமூகமளித்து வாக்குமூலம் அளிக்குமாறு குறித்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் விளம்பரம் செய்யப்பட்ட அரச ஊடகங்களுக்கான நிலுவைக் கொடுப்பனவு தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னரும் மஹிந்த ராஜபக்ச குறித்த ஆணைக்குழுவிடம் இந்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளித்திருந்தார்.
அவரது வாக்குமூலத்திற்கு அமைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும், அமைச்சரருமான சுசில் பிரேமஜயந்தவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.