Breaking News

உள்ளூராட்சி தேர்தலில் நேருக்கு நேர் மோதத் தயாராகும் ஐ.தே.கவும் சு.கவும்


2016 மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள உள்ளூ­ராட்சி மன்­றத் ­தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் நேருக்கு நேராக மோதத் தயா­ராகி வரு­கின்­றன.

இத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்தும் வகையில் கட்­சியை மறு­சீ­ர­மைக்க கட்­சியின் பொரு­ளாளர் அமைச்சர் எஸ்.பி. திஸா­நா­யக்க தலை­மையில் குழு­வொன்றும் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந் நாட்­களில் கட்­சியின் மாவட்ட குழுக்­கூட்­டங்கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. மாவட்ட குழுக் கூட்­டங்கள் முடி­வ­டைந்­ததும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சியின் வெற்­றிக்­காக அடுத்­த­மாதம் நேர­டி­யாக பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட இருக்­கின்றார்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடை­பெறும் கால­கட்டம் குறித்து பல்­வேறு கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்­டாலும், எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெறும் என்ற எண்­ணத்­துடன் வாக்­கா­ளர்­களை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தேர்ந்­தெ­டுக்கும் வகையில் அக்­கட்சி கீழ் மட்­டத்­தி­லி­ருந்து புன­ர­மைப்புப் பணி­களை நவம்பர் மாதத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்க நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.

அடுத்த வாரத்­தி­லி­ருந்து கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் வாரந்­தோறும் கூடி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி அங்குள்ள குறைபாடுகளை களையவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.