Breaking News

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழில் போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அதரவு தெரிவித்தும் யாழப்பாண மத்திய பேரூந்து நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிக – லெனினிசக் கட்சினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அரசியல் கைதிகளின் உறவினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அரசின் மெத்தனப் போக்கினைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.அத்துடன், ‘தாமதிக்காதே தாமதிக்காத உடனே விடுதலை செய்’, ‘சகல அரசில் கைதிகளையும் உடன் விடுதலை செய்’, மைதிதிரி ரணில் அரசே உடன் நடவடிக்கை எடு’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல்வாதிகள் என 100 ற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

பொது மன்னிப்பின் கீழ் தங்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி 14 சிறைகளிலுள்ள 217 அரசியல் கைதிகள் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.