புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதில் சிக்கல் கிடையாது - சரத் பொன்சேகா
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதில் சிக்கல் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பெலவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.குமரன் பத்மநான் சுதந்திரமாக இருக்க முடியுமானால் ஏன் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்ய முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நெத்தலிகளை பிடிப்பதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.எனவே அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் தமக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும்இ தற்போதைய சட்ட மா அதிபர் தனது கடமைகளை சரிவரச் செய்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்ட மா அதிபர் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்தாமைக்கு எதிராக நீதிமன்றின் உதவி நாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் 8ம் திகதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி தேர்தல்களில் வெற்றியீட்டிய நல்லாட்சி அரசாங்கம்இ வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளமையினால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் சிலர் அந்த வோர் இந்த வோர் என யுத்தம் பற்றிய புத்தகங்களை எழுதியதாகவும்இ யுத்தம் பற்றி நன்கு தெரிந்த தாம் ஓர் புத்தகத்தை விரைவில் எழுத உள்ளதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.