புனிதப் போருக்கு அழைக்கிறது – ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக கடந்த மாதம் 30ஆம் திகதியிலிருந்து ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவூக்கு எதிராக புனிதப்போர் தொடுக்க, இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் அபு அகமது அல் அத்னானி வெளியிட்ட குரல்பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறை நம்பிக்கை உடையவர்களுக்கும் நாத்திகர்களுக்கும் இடையேயான போர் எனவும் அந்த குரல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.