ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்
ராமேஸ்வரத்திருந்து மின்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நேற்றிரவும் (புதன்கிழமை) அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வடிவமைப்புடன் கூடிய அதிநவீன ரோந்துப்படகில் 20க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் அங்கு வந்து தமிழக மீனவர்களின் படகுகளிலிருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், படகில் இருந்த பொருட்கள் சிலவற்றை கடலில் வீசி எச்சரிக்கையம் விடுத்துள்ளனர்.இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலால் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.