Breaking News

பொருளாதார முதலீடுகள் குறித்து சிங்கப்பூர் பிரதமருடன் ரணில் பேச்சு

இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த நாட்டின் பிரதமர் லீ சென் லூங் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நேற்று சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங்கை சந்தித்த இலங்கை பிரதமர், இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிப்பது குறித்துப் பேச்சு நடத்தினார்.

அதேவேளை, சிங்கப்பூரில் பிரதிப் பிரதமரும், பொருளாதார மற்றும் சமூக கொள்கைக்காக இணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம், உள்நாட்டு விவகார மற்றும் சட்ட அமைச்சரான சண்முகம், வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ஈஸ்வரன், நிதி அமைச்சர் ஹெங் வீ கீற் உள்ளிட்டோருடனும் ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இலங்கையில் கூடுதல் பொருளாதார முதலீடுகளைச் செய்ய ஊக்குவிக்கும் நோக்கிலேயே ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.