Breaking News

அடுத்த ஆண்­டுக்குள் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு ; யாழில் சம்­பந்தன் சூளுரை

நீண்ட கால­மாக இலங்­கையில் நிலவிவரும் இனப்­பி­ரச்­சி­னைக்கு அடுத்த ஆண்­டுக்குள் அர­சியல் தீர்வு எட்­டப்­படும் ஒரு சூழல் உரு­வாகும் என எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்­கட்சி தலைவர் பத­வியை பெற்­றபின்னர் யாழ்ப்­பா­ணத்­திற்­கான முதல் விஜ­யத்தை நேற்­றை­ய­தினம் மேற்­கொண்டார்.

அவர் யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் நிகழ்­வொன்றில் பிர­தம விருந்­தி­னராகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் ­மேலும் உரை­யாற்­றி­ய­தா­வது.

நாம் ஒரு அர­சியல் தீர்­வினை விரைவில் எட்ட வேண்டும். அத்­தீர்வு எம் மக்­க­ளுக்கு ஏற்­பு­டை­ய­தா­கவும் நிரந்­த­ர­மா­ன­தீர்­வா­கவும் அமை­ய­வேண்டும். அத்­துடன் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தக்­கூ­டிய தீர்­வா­கவும் இருக்­க­வேண்டும் மேலும் எம­து­மக்­களின் இறை­மையை சுதந்­தி­ர­மாகக் கொண்ட தீர்­வா­கவும் காணப்­ப­ட­வேண்டும்.

இது தொடர்பில் நாங்கள் மிகவும் நிதா­ன­மாகச் செயற்­ப­டு­கிறோம். எம்­மக்­க­ளுக்கு ஏற்­பு­டை­ய­தான தீர்வை வழங்­கும்­வரை அதி­லி­ருந்து நாங்கள் வில­கவும் மக்­களைக் கைவி­டவும் மாட்டோம்.

அர­சி­ய­லுக்குள் என்னை கொண்­டு­வந்­தவர் தந்தை செல்­வா­வாகும்.அவர் இல்­லை­யென்றால் நான் அர­சி­ய­லுக்குள் வந்­தி­ருக்­க­மு­டி­யாது. அவர் எப்­போதும் எனக்குக் கூறுவார் மிகவும் நிதா­ன­மாகச் செயற்­ப­ட­வேண்டும்.

மேலும் எமது மக்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு ஓர் அர­சியல் தீர்­வினைப் பெற்று மக்கள் சுதந்­தி­ர­மா­கவும் நிம்­ம­தி­யா­கவும் சுய­ம­ரி­யா­தை­யு­டனும் பாது­காப்­பா­கவும் வாழக்­கூ­டிய நிலை­மையை ஏற்­ப­டுத்­த­வேண்டும். ஆகையால் ஓர் தீர்வை எட்­டு­வதில் எங்­க­ளுக்கும் ஓர் பங்கு இருக்­கின்­றது அந்தப் பங்­க­ளிப்பை வழங்­க­வேண்­டு­மென தந்தை செல்வா என்­னிடம் கூறி­யி­ருந்தார்.

எனவே இப்­போதும் தந்தை செல்­வாவின் சிந்­த­னை­க­ளிலும் கருத்­துக்­க­ளிலும் செயற்­பட்­டு­வ­ரு­கிறோம். எவ்­வாறு மக்­களை தந்தை செல்வா கைவி­டாமல் தீர்­வுக்­காகப் போரா­டி­னாரோ அவ்­வாறே நாமும் போரா­டுவோம்.

சர்­வ­தே­சத்தின் நிலைப்­பாடு

தற்­போது முன்­னெப்­போதும் இல்­லாத அள­வுக்கு சர்­வ­தேச சமூகம் எமது பிரச்­சி­னையில் அதி­கூ­டிய கவனம் எடுத்­து­வந்­துள்­ளது. அதன் அடிப்­ப­டை­யில்தான் மனித உரிமைப் பேரவை கடந்த 2012, 2013, 2014 ஆம் ஆண்­டு­களில் போர்க்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யுள்­ளது.

அவற்றை இலங்கை அர­சாங்கம் எதிர்த்­தி­ருந்­தன. அவ்­வா­றான சூழ­லிலும் தீர்­மா­னங்கள் பெரும்­பான்மை வாக்­கினால் நிறை­வேற்­றப்­பட்­டது. நேற்று ஒரு தீர்­மானம் ஐ.நா. மனித உரிமை சபையில் நிறை­வேற்­றப்­பட்டது. அதி­லுள்ள விட­யங்­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு எம்­மா­லான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்வோம். இதனை எனக்கு எதிர்க்­கட்­சித்­த­லைவர் பதவி கிடைத்த கார­ணத்தால் கூற­வில்லை. அந்தப் பதவி கிடைத்­தாலும் கிடைக்­கா­விட்­டாலும் அதனை அமுல்­ப­டுத்த கடு­மை­யான நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டி­ருப்போம்.

எதிர்க்­கட்சித் தலைவர் பதவி

வடக்குக் கிழக்­கி­லுள்ள மக்கள் ஒற்­று­மை­யாக எமது கட்­சியை ஆத­ரித்து .பெரும்­பான்­மை­யாக வாக்­க­ளித்­ததன் அடிப்­ப­டை­யிலும் அவர்­களின் ஜன­நா­யக ரீதி­யான முடிவின் அடிப்­ப­டை­யிலும் கிடைக்­கப்­பெற்ற பத­வியே எதிர்க்­கட்­சிப்­ப­த­வி­யாகும். ஆகவே இப் பத­வி­யா­னது எனக்­கான பத­வி­யன்று இது மக்­க­ளு­டைய பத­வியே. எனவே அவ்­வா­றான பத­வியை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விதத்தில் நான் பயன்படுத்துவேன்.

எதிர்க்கட்சிப் பதவியில்லாத முன்னைய காலத்தில் கூட வெளிநாட்டுத் தலைவர்கள் முக்கிய பிரதிநிதிகள் அதேபோன்று நாங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தலைவர்கள் பிரதி நிதிகள் ஆகியோரைச் சந்திப்பதில் எமக்கு கடினம் இருந்ததில்லை. ஏனெனில் எம்மை சந்தித்து எமதுமக்களுடைய உண்மையான நிலையை அறிந்துகொள்வது தமது கடமை என்று வெளி நாட் டுத்தலைவர்கள் எண்ணினார்கள் என்றார்.