சீனா இலங்கை உறவு விருத்தியடையும் – மஹிந்த நம்பிக்கை
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான உறவு மீண்டும் விருத்தியடையும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் ஸ்தாபக தினத்தை ஒட்டி, வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையும் சீனாவும் ஏனைய நாடுகளுடன் சிறந்த உறவைக் கொண்டுள்ளன.
இதன் அடிப்படையில், இலங்கையின் உயர்நீதிமன்ற கட்டட தொகுதி மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் என்பன சீன் அரசாங்கத்தினால் கட்டப்பட்டவை.
இந்த நிலையில், இது இரண்டு நாட்டு பொது மக்களுக்கும் நன்மை பயக்கும். கடந்த 28 வருட காலப்பகுதியினில், சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்தமை கடந்த வருடத்தில் முதல் தடவையாக இடம்பெற்றது என்றும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.