Breaking News

மீனவர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வையே இந்தியா விரும்புகிறது

மீனவர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வையே இந்திய மத்திய அரசு விரும்புகிறது என அந்த நாட்டின் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காணப்படுவதையே மத்திய அரசு விரும்புகிறது. மீனவர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கவேண்டுமெனில் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, நாகை நம்பியார் நகருக்கு வந்த அமைச்சர், அங்குள்ள சமுதாயக் கூடத்தில் மீனவர்கள், பஞ்சாயத்தார்களை சந்தித்தார். அப்போது மீனவர்கள், இலங்கைச் சிறையில் உள்ள நம்பியார் நகரைச் சேர்ந்த 37 மீனவர்கள், 4 படகுகளை மீட்டுத் தர கோரிக்கை விடுத்தனர். பின்னர், மீனவர்களுக்கு பொன். ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். 

இதைத் தொடர்ந்து, நம்பியார் நகர் மீனவர்கள் தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தத்தையும், சனிக்கிழமை நடத்தவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தையும் கைவிட்டனர்.