வித்தியா கொலை : பிரதி பொலிஸ் மா அதிபரைக் கைது செய்ய நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய புங்குடுதீவு மாணவி வித்யா கொலைச் சம்பவம் தொடர்பில் அப்போது வட மாகாணத்தின் பிரதி பொலிஸ மா அதிபராக செயற்பட்டவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொலையின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும், மஹாலிங்கம் சிவகுமார் என்பவரை பொலிஸ் தடுப்பில் இருந்து வெளியேற்றி கொழும்பிற்கு அழைத்துச் செல்லபட்ட சம்வம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழக்கினை விசாரணைச் செய்யும், CIDயினரின் அறிக்கைக்கு அமைய, மஹாலிங்கம் சிவகுமார் எனப்படும் பிரதான குற்றவாளியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்காக பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.