இந்தியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் முறையிடமாட்டோம் - அமைச்சர் ராஜித
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறுவது சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முறைப்பாடு செய்வதில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா, இலங்கையின் அயல்நாடு என்பதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், ஐரோப்பிய ஒன்றியத்தினால் எமது நாட்டு மீன்கள் கொள்வனவு செய்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதால், அது தொடர்பான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மீன்களை ஐரோப்பிய நாடுகளுக்கு மீண்டும் விநியோகம் செய்வதற்காக 57 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என் அமைச்சர் தெரிவித்ததாக தஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி அதில் 36 நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.