Breaking News

உள்ளூராட்சி தேர்தலுக்காக புதிய கூட்டணியமைக்க ஐ.ம.சு.கூ. திட்டம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் சில, அந்த முன்னணியில் போட்டியிடாது புதிய முன்னணியொன்றில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளன.

இவ்வாறாக தினேஸ் குணவர்தனவின் மஹஜன எக்சத் பெரமுன , விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி , வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் உதய கம்மன்பிலவின் பிவித்துறு ஹெல உறுமய ஆகிய கட்சிகளும் மற்றும் சில இடதுசாரி கட்சிகளும் ஒன்றிணைந்தே புதிய கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக அந்த கட்சிகளின் தலைவர்களிடையே எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இவர்களின் கட்சிகள் எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலின் போது வெற்றிலை சின்னத்தில் அல்லாது வேறு சின்னத்திலேயே போட்டியிட திட்டமிட்டுள்ளன.

தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சி செயற்படும் வரை தாம் இனி அந்த கட்சியில் போட்டியிட மாட்டோம் என உதய கம்மன்பில அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.