ஐ.நா இலங்கைக்கு மேலும் நிதி உதவிகளை வழங்க உள்ளது
ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு மேலும் நிதி உதவிகளை வழங்க உள்ளது.இலங்கை ஜனாதிபதியின் நடவடிக்கைகளை உலக நாடுகளே கண்காணித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
சமாதானத்தை நிலைநாட்டும் முனைப்புக்களுக்கு மேலும் நிதி உதவிகளை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.நேற்றைய தினம் நியூயோர்க்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, பான் கீ மூன் சந்தித்துள்ளார்.
ந்த சந்திப்பு ஐக்கிய நாடுகளின் பொது அமர்வுக்கு புறம்பாக நியூயோர்க்கில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையின் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள்இ மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையின் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் பான் கீ மூன்இ மைத்திரிபாலவுடன் தொடர்புக்கொண்டு தேர்தல் குறித்து கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியிருந்தையும் குறிப்பி;டத்தக்கது. ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபாலஇ இந்திய பிரதமர்இ சுவிஸ் ஜனாதிபதி உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.