காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் பூர்த்தி
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரனகம தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழு அதன் விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் விசாரணை அறிக்கை எப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படும் என்ற விபரங்களை வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைய நாட்களாக கடும் வேலைப்பளுவில் இருப்பதாகவும் அவரை சந்திக்க நேரமொன்றை ஒதுக்கிப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1990ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் காணாமல் போன ஆயிரக் கணக்கானவர்கள் பற்றிய முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும்இ ஜனாதிபதியே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி வரையில் வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களினால் 17329 முறைப்பாடுகளையும். படைவீரர் குடும்பங்களினால் 5000 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.