சம்பந்தன் எதிர்கட்சி தலைவராக வேண்டும்: ததேகூ யோசனை நிறைவேற்றம்!
இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன், சம்பந்தன் பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதனடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குழுக்களின் பிரதித்தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
இன்றைய கூட்டத்தில் பின்வரும் நியமனங்களும் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் கொறடா - தர்மலிங்கம் சித்தார்த்தன். (பா.உ), பாராளுமன்றக் குழுச் செயலாளர் - சிவஞானம் சிறீதரன் (பா.உ), தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் - ம. ஆ. சுமந்திரன் (பா.உ)