யாழ்.மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்!
பல்வேறு ஊழல் மோசடிகள், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த யாழ் மாநகரசபை ஆணையாளர் பிரணவநாதன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது யாழ் மாநகரசபை ஆணையாளராக பி.வாகீசன் என்பவர் பதவியேற்றுள்ளார்.சுயவிருப்பின் பேரிலேயே பதவியுயர்வு பெற்றுச் செல்வதாக பிரணவநாதன் தெரிவித்துள்ளார். கல்வித்திணைக்களத்தில் நிர்வாகப் பணிகளுக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.